இதுதான் எனது கடைசி தேர்தல் என்று சொல்லும் கலைஞரை நம்பி நாம் ஓட்டு போட்டு விட்டால் அடுத்த வருடம் நமக்கு ஒரு பிரச்சினை என்றால் யார் நமக்காக காலையில் இருந்து மதியம் வரை உண்ணாவிரதம் இருப்பார்கள்....அய்யா கலைஞர் அவர்களே, தமிழுக்காகவும், தமிழ் மக்களுக்காகவும் நீங்கள் உழைத்தது, இதுவரை நீங்கள் உழைத்ததற்கு நாங்கள் அனுபவித்த இன்பங்களே போதும் என்று எண்ணுகின்றோம்......
அவருக்கு கடைசி தேர்தலில் சற்று ஓய்வு கொடுப்போமே....
கட்சிக்குள் உட்பூசல் இருக்கலாம், ஆனால் கட்சியே உட்பூசலில் நிற்கின்றது...
தேர்தல் நேரத்தில் செல்வகணபதி எம் பி மீது சுடுகாட்டு கூரை ஊழல் என்று வெளிவந்திருக்கின்றது...இதையும் தாண்டி அந்த கட்சிக்கு நாம் வாக்களிப்பது வெட்க கேடானது...
திமுக மீது கோபம் என்றால் அதிமுக விற்கு வாக்களிக்கின்றோம்...அதிமுக மீது கோபம் என்றால் திமுக விற்கு வாக்களிக்கின்றோம்...ஏன் வேறு கட்சிகளே இல்லையா?
மாறுபட்ட கட்சியினை மக்கள் தேர்ந்தெடுத்து இரண்டு கட்சிகளுக்கு ஒரு மாற்றினை நாம் கொண்டு வர வேண்டும்...
திமுக ஒவ்வொரு பிரச்சாரத்திலும் நாங்கள் எவ்வளவோ செய்தோம்...அதிமுக என்ன செய்தது என்று கேட்கின்றது....
எவ்வளவோ ஊழல் அல்லது வன்முறை என்று சொல்கின்றார்களா? அல்லது என்ன சொல்ல வருகின்றார்கள் என்று தெரியவில்லை....
0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home