Friday 3 October 2014

நேற்று 03/10/2014 இந்திய தொலைக்காட்சியில் ஆர் எஸ் எஸ் தலைவர் திரு மோஹன் பாக்வாத் அவர்கள் உரை மிகவும்
நன்றாக இருந்தது. இந்திய மக்களை எதிர் நோக்கியுள்ள பல சவால்களை பற்றி அவர் கூறியது எல்லாம் நாம் கவனத்தில்
கொள்ள வேண்டியது. வழக்கம் போல் சில அதி மேதாவிகள் இதை பற்றி கருத்து சொல்ல ஆரம்பித்து விட்டனர்.
அவர்களுக்கு நான் சொல்லி கொள்ள வேண்டியது ஒன்றே ஒன்று தான்.
நீங்களும் நல்லது சொல்ல மாட்டீர்கள். நல்லதும் செய்ய மாட்டீர்கள்.
ஆனால் நமக்கு பிடிக்காத யாரோ ஒருவர் ஏதேனும் நல்லது சொன்னால் அதை என் உங்களால் ஏற்று கொள்ள முடிவதில்லை.
எனக்கு தெரிந்த வரையில் நரேந்திர மோடி அவர்கள் காந்திஜி ஐ ஆராதிக்கும் உண்மையான ஒரு தலைவர்.
முடிந்தால் நாம் அவர் கரங்களை வலுப்படுத்துவோம்.இல்லை என்றால் ஒதுங்கி போவோம்.
தயவு செய்து நல்லது செய்பவர்கள் மீது நாம் பகைமை பாராட்ட வேண்டாம். 
ஜாய் ஹிந்த்.

Wednesday 1 October 2014

தமிழ்நாட்டில் எல்லோரும் தற்போது ஜயலலிதாவின் ஜாமீன் மனு பற்றி பேசிக்கொண்டிருக்கிறார்கள்
ஆனால் நாம் ஒன்றை கவனிக்க தவறி விட்டோம்.ஜெயலலிதா குற்றவாளியா இல்லையா என்பது 
நாம் ஆராய வேண்டாம்.அதை அவர் பார்த்து கொள்வார்.நாம் நமது மனசாட்சிப்படி எல்லாவற்றையும்
அணுக வேண்டும்.
நமக்கு என்று வரும் போது நாம் செய்யும் எல்லா தவறுகளையும் நாம் நியாய படுத்துகிறோம்.
நிஜமாக யாராவது தவறு செய்யாதவர்கள் இருக்கிறார்களா என்றால் எவரும் இல்லை.
எனவே எல்லாம் அவரவர் விதிப்படி தான் நடக்கிறது.
இன்று காந்தி ஜயந்தி.இன்று முதல் நாம் நம்மை பண்படுத்திக்கொள்வோம்.
முதலில் நாம் நல்லவர்களாக மாறுவோம்.முடிந்த வரையில் மற்றவர்களுக்கு நாம் உதவி செய்வோம்.
எது வந்தாலும் ஏற்றுக் கொள்வோம். இதுவும் கடந்து போகும். வந்தே மாதரம்.